» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா நிவாரண நிதி, மளிகை தொகுப்பு உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

வியாழன் 3, ஜூன் 2021 12:37:58 PM (IST)



முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி , கரோனா நிவாரணம் 2-ஆவது தவணை ரூ.2,000, 14 மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார், பின்னர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரோனா நிவாரணத் தொகை 2-ஆவது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய அடங்கிய பைகளை, அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து 12,959 கோயில்களில் மாத ஊதியமின்றிப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள், பூசாரிகள், பணியாளா்களுக்கு கரோனா கால உதவித் தொகையாக ரூ.4,000, மளிகைப் பொருள்கள் அளிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் பணியின் போது மரணம் அடைந்த முன்களப் பணியாளா்களான பத்திரிகையாளா்கள், மருத்துவா், மருத்துவப் பணியாளா், காவலா், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ஆகியவற்றையும் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory