» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் துவங்க நடவடிக்கை: முதல்வர் உத்தரவு

செவ்வாய் 18, மே 2021 5:28:52 PM (IST)

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி, மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி  செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இது தொடர்பான ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ம் தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கலாம். ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே  உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு  தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும்.

மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்களுக்கு  தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும். குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும். ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory