» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீவிபத்து

செவ்வாய் 18, மே 2021 12:15:16 PM (IST)



மேட்டூர் அனல்மின்நிலையத்தில் தீடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் பழைய அனல்மின்நிலையத்தில் 1 அலகில் 210 மெகாவாட் வீதம் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2 நாட்களாக மின் தேவை குறைந்ததால் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த 4 அலகுகளுக்கும் நிலக்கரி குவித்து வைத்துள்ள யார்டில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி எடுத்து செல்லப்படும். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிலக்கரி எரியும் போது கன்வேயர் பெல்ட்டும் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்து மேட்டூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வரும் நாட்களில் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory