» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்ப்பு

செவ்வாய் 18, மே 2021 12:04:01 PM (IST)

தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

வெளியூர் செல்வதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பாஸ் அவசியமென்றும் அதனை விண்ணப்பிக்க சில வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. மருத்துவ அவசரம், முதியோா் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சாா்ந்த காரியங்கள், திருமணம் போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இ-பாஸ் பதிவில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் அதனை நீக்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று (மே 18) அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

adminமே 18, 2021 - 01:13:03 PM | Posted IP 108.1*****

enna sir ithu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory