» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் : தமிழக அரசு விளக்கம்

திங்கள் 17, மே 2021 5:49:34 PM (IST)

இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பதிவு முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15-ந்தேதி அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவில், திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற பிரிவில் நிறைய பேர் விண்ணப்பிப்பது போன்ற சூழல் காரணமாக அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

kumarமே 17, 2021 - 07:04:12 PM | Posted IP 108.1*****

sari.. apuram thirumanathirku selbavargal eppadi sella mudiyum?? vilakkavum...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory