» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனாவால் அருண்ராஜா காமராஜ் மனைவி மரணம் : உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திங்கள் 17, மே 2021 5:37:16 PM (IST)



கரோனாவால் பலியான இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு  உதயநிதி ஸ்டாலின்  நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி கவனம் பெற்ற அருண்ராஜா காமராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வரும் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்கி வருகிறார்.

அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார்.இதையடுத்து கரோனாவால் இறந்த சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதுபற்றி ட்விட்டரில் அவர் எழுதியதாவது:

நேர்த்தியான இயக்குநர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory