» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக பிரமுகர் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 2 பேர் வழக்கு பதிவு!!

வியாழன் 8, ஏப்ரல் 2021 4:03:18 PM (IST)

சிவகிரி அருகே திமுக பிரமுகரை தாக்கியதாக வாசுதேவநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரி பாரதி கிழமேல் தெருவைச் சேர்ந்தவர் சடையாண்டி மகன் மாரிமுத்து (28). இவர் நாம் தமிழர் கட்சி வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாரிமுத்து திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாள் 7ம் தேதி இரவு மாரிமுத்து தனது ஸ்டூடியோவில் இருந்த போது அங்கு வந்த வாசுதேவநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்த மதிவாணன் (35), வடுகப்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் காசிராஜன் ஆகிய இருவரும் எப்படி திமுக விற்கு ஆதரவாக செயல்படலாம் என்று கூறி மாரிமுத்துவை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து காசிராஜனை கைது செய்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory