» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமா? - பள்ளிக் கல்வித்துறை அவசர ஆலோசனை
வியாழன் 8, ஏப்ரல் 2021 3:52:05 PM (IST)
தமிழகத்தில் திட்டமிட்டபடி 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா? என பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை நடத்த உள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், சில கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் முடிந்தாலும் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாபநாசம் சிவன் கோயிலில் சித்திரை விஷு திருவிழா : பக்தர்களுக்கு தடை; வெறிச்சோடிய தாமிரபரணி!!
புதன் 14, ஏப்ரல் 2021 12:48:36 PM (IST)

பெரியார் சாலை பெயர் மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? ஸ்டாலின் கேள்வி
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:52:36 PM (IST)

பாளை. அரசு சித்தா மருத்துவமனையில் கரோனா சிகிச்சை ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:19:19 PM (IST)

மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் : தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:28:13 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:23:54 PM (IST)

தமிழ் புத்தாண்டு: மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அருளாசி!!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 12:53:12 PM (IST)
