» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகை ராதிகா சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி

புதன் 7, ஏப்ரல் 2021 4:37:36 PM (IST)

நடிகை ராதிகா சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த  நடிகை ராதிகா சரத்குமார் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. 

இதனிடையே தனது கணவர் சரத்குமார், கமல்ஹாசன் மற்றும் சமக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ராதிகா பிரசாரம் மேற்கொண்டார். நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், சரத் குமாருடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். இந்நிலையில், இன்று அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காசோலை மோசடி வழக்கில் இன்று அவர் நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை எனத் தெரியவந்துள்ளது. 


மக்கள் கருத்து

tamilanApr 7, 2021 - 07:52:11 PM | Posted IP 162.1*****

நேற்று வரை வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டு போட்டவருக்கு திடீரென எப்படி கொரோனா வந்தது . கைது பயமா!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory