» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சரத்குமார் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு; ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

புதன் 7, ஏப்ரல் 2021 3:23:38 PM (IST)

காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகை ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்கில் காலையில் விதிக்கப்பட்ட தண்டனையயை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பிற்பகலில் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக சரத்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக சரத்குமார், பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனின் தண்டனை 30 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரத்தில், பணத்தை திரும்ப அளிக்காததால், ரேடியண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.2014-ம் ஆண்டு ரூ.1.50 கோடி ரேடியன்ஸ் நிறுவனத்திடம் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக பெற்றுள்ளார். கடனைத் திருப்பி அளிப்பதில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory