» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை தெற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் : கமல்ஹாசன் வலியுறுத்தல்!

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 12:27:11 PM (IST)கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மறுதேர்தல் நடத்த வலியுறுத்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமல்ஹாசன், இன்று காலை 11 மணிக்கு தொகுதிக்கு உள்பட்ட கெம்பட்டி காலனியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து பார்வையிட்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

டோக்கன் வழங்கி, பரிசு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்குவதாக தகவல் கிடைத்ததால், நான் புறப்பட்டு வந்தேன். டோக்கன் வழங்கியதற்கான நகல் என்னிடம் உள்ளது. பணமும் அதிகளவில் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிப்பேன். புகார்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மறு வாக்குப் பதிவுக்கு வலியுறுத்துவோம் என்றார். கமல்ஹாசனுடன்,  அவரது மகள் ஸ்ருதி, அக்ஷரா ஆகியோரும் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory