» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் : மார்ச் 12 ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:24:02 PM (IST)
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று தேர்தல் ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம். தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வேட்பாளர் உடன் 4 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி. வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் தேர்தல் செலவு அதிக அளவில் நடைபெறும் என்பதால் முக்கியாமாக கருதப்படுகிறது.
விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதுபற்றி விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும். ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் புதுச்சேரி தொகுதிக்கு ரூ.22லட்சம், மற்ற 4 மாநிலங்களில் ரூ.30.8லட்சம் தேர்தல் செலவு அனுமதி. 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. வாக்காளர்களின் பாதுகாப்பு தான் முக்கியமானதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது என தெரிவித்தார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெரியார் சாலை பெயர் மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? ஸ்டாலின் கேள்வி
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:52:36 PM (IST)

பாளை. அரசு சித்தா மருத்துவமனையில் கரோனா சிகிச்சை ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:19:19 PM (IST)

மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் : தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:28:13 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:23:54 PM (IST)

தமிழ் புத்தாண்டு: மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அருளாசி!!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 12:53:12 PM (IST)

தமிழ் புத்தாண்டு : முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 12:23:14 PM (IST)
