» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: போக்சோ சட்டத்தில் கைதானவர் சிறையில் தற்கொலை!!
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 4:17:07 PM (IST)
சேலத்தில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். சேலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர், 17 வயது பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் போலீசார் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 8 மாதங்களாக இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அசோக்குமார் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தின் மனு செய்திருக்கிறார். ஆனால் ஜாமீன் கிடைக்காத நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் சிறையிலேயே அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜாமீன் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அசோக்குமாரின் சடலத்தை மீட்ட சிறைத்துறை காவலர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏழைகளின் வயிறு எரியும் நெருப்பு ஆபத்தானது: மத்திய அரசுக்கு கமல் கண்டனம்
வியாழன் 25, பிப்ரவரி 2021 9:01:18 PM (IST)

ராகுல் காந்தியிடமே நாராயணசாமி பொய் சொன்னார் : புதுச்சேரியில் மோடி பேச்சு!!
வியாழன் 25, பிப்ரவரி 2021 4:14:25 PM (IST)

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 25, பிப்ரவரி 2021 4:09:40 PM (IST)

தமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து : மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
வியாழன் 25, பிப்ரவரி 2021 4:01:49 PM (IST)

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாா் குறித்து விசாரிக்க குழு : தமிழக அரசு உத்தரவு
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:31:55 AM (IST)

பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன் : சசிகலா பேச்சு
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:55:18 AM (IST)
