» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் தங்க-வைர நகைகள் கொள்ளை

திங்கள் 22, பிப்ரவரி 2021 8:59:41 AM (IST)

சென்னையில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், பிஷப்கார்டன் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன் (36). தொழில் அதிபரான இவர், கடந்த 16-ந் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றார். நேற்று முன்தினம் இரவு அவர் சென்னை வந்தார். சென்னை வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தன.

பீரோவில் இருந்த தங்க-வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகளையும், ரூ.1 லட்சத்தையும் கொள்ளையர்கள் மூட்டை கட்டி அள்ளிச்சென்று விட்டனர். இது தொடர்பாக அபிராமபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மயிலாப்பூர் துணை கமிஷனர் சேஷாங்சாய், உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் மூலம் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory