» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப் போகும்- மத்திய அரசு

வியாழன் 21, ஜனவரி 2021 5:22:40 PM (IST)

10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என மத்திய அரசு தெரிவித்தது.

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தந்தால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்றும், புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு 6 வாரம் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கூறி உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory