» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலா உயிருக்கு ஆபத்து: உறவினர்கள் புகார்

வியாழன் 21, ஜனவரி 2021 11:11:26 AM (IST)

திடீரென உடல்நலக் குறைவு காரணமாக வி.கே.சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 2017 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் வி.கே.சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக உள்ளார். அவர், தனக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கரோனாவுக்கான ஆன்டிஜென் சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டன. பரிசோதனையில் அவர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் வியாழக்கிழமை தெரிய வந்ததும் அடுத்தகட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனையிலும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவிக்கு மாற்றப்பட்டு அவருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் பிரச்னைக்கு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு கடந்த 10 நாள்களாக சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே சசிகலாவை தனியார் மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory