» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா: ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஆசியுரை
புதன் 13, ஜனவரி 2021 11:36:34 PM (IST)
பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பொங்கல் விழா ஆசியுரை வழங்கியுள்ளார்.
ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பொங்கல் விழா ஆசியுரை: பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா. அறுவடை செய்து முதலில் சூரியனுக்குப் படைத்து வணங்கும் விழா. பொங்கல் திருநாளில் பூமிக்குப் பூசைபோட்டு அடுப்பினை வைத்து அருகம்புல் இட்டு நெருப்பேற்றி புதிய மண்பானை வைத்துப் பாலூற்றி வணங்குகிறோம். பானை பெரிதேயானாலும் பால் சிறிதே ஊற்றினாலும் அது பொங்கி வருகிறது. அது பொங்கி வரும்போது நம் உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்குகிறது.

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல். மாட்டை வணங்குகின்றோம். பசு, பால் கொடுக்கிறது. மாடு ஏர் ஓட்ட பயன்படுகிறது. பால் இல்லை எனில் மனிதன் வாழ்க்கை கிடையாது. குழந்தைகளின் வாழ்க்கையும் கிடையாது. பால் சார்ந்த வியாபாரமும் கிடையாது. இப்பொழுது அதிலும் விஞ்ஞானத்தை புகுத்தி பால் பவுடர் வந்துவிட்டது. எப்போது விஞ்ஞானம் உள்ளே புகுந்ததோ அப்பொழுதே மெய்ஞானம் போய்விட்டது. இப்பொழுது அந்த மெய்ஞானம் திரும்ப வரத்துவங்குகிறது
தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகை உற்றார், உறவினர்களும், பொதுமக்களும், ஒற்றுமையாக இருக்க உதவுகிறது.ஒரே தாய்! ஒரே குலம் என்பது போல அனைவரும் ஒன்றுதான். இயற்கை தந்த தண்ணீர் ஒன்றதான் உணவு ஒன்றுதான். அதுபோல வாழ்த்துகளும் ஒன்றுதான் வணக்கங்களும் ஒன்றுதான்.
சென்ற காலம் பொற்காலம் என்று சொல்வது உண்டு. என்ன கெட்டது செய்தோமோ, பாவங்கள் செய்தோமோ கொரோனா நோய் வந்துவிட்டது. கொரோனா என்பது மாரியம்மைதான். அடுத்து வந்த கொரோனா சின்னம்மை போன்றது. இப்பொழுது அனைத்து உறவுகளையும், உயிரினங்களையும் இயற்கைதான் காப்பாற்ற வேண்டும் என்று ஓம் சக்தி! பராசக்தி கூறி வணங்குகிறோம்.
உள்ளத்தில் புரிந்தும் புரியாமலும், தெரிந்தும் தெரியாமலும், பார்த்தும் பார்க்காமலும், கேட்டும் கேட்காமலும் இருக்கின்றோம். தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்காதவனை எழுப்ப முடியாது. அதுபோல உண்மையான பசிக்கு, இருப்பவன் கொடுக்கமாட்டான் இல்லாதவன் தான் கொடுப்பான்.தாய் இன்றி பிள்ளை கிடையாது. தாயும் இயற்கைதான். பெற்றதாயை வணங்க வேண்டும்.எல்லோருக்கும் ஆசை உண்டு. கடல் அலைபோல் ஆசை இருக்க வேண்டும். அது அதிகமாகும்போது அது அழிவைத் தருகிறது.
அன்று சித்தர்கள் கூறிய கருத்துக்களைக் கேட்டோம். சித்தர்கள் கூறிய மருந்துகளைத்தான் நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். அன்று பஞ்சாங்கத்தை வைத்து வானிலையைக் கணித்தோம். இன்று அப்படி இல்லை விஞ்ஞானத்தால் இன்று கணிக்கும் வானிலை பொய்க்கிறது. உழைப்பால் உயரவேண்டும். பொய் பேசக்கூடாது உண்மையையே பேச வேண்டும். தாய் தந்தையர் சொல் கேட்க வேண்டும்.
ஆணவம் என்பது துருப்பிடித்த ஆணி போல! எப்படி அந்த ஆணி காலில் குத்தினால் காலையே எடுக்கும்படி ஆகிறதோ, அதுபோலத்தான் ஆணவமும். உள்ளம் துருப்பிடிக்காமலும், வி~த்தன்மை இல்லாமலும் கொடூர எண்ணம் இல்லாமலும் வேதனை அறுத்துச் சோதனை இல்லாமல் காப்பற்றி அருள் கொடு தாயே என்று இறைவனை வணங்க வேண்டும்.
குழந்தைகள் கூட "இங்கா” "இங்கா” என்று சொல்லும் போது ‘அம்மா’ ‘அம்மா’ என்று சொல்கிறது. இப்போது இருக்கும் காலத்தில் காசுக்காக வைக்கோல் கன்றுகுட்டி வைத்துப் பால் கறக்கின்றான். போன வருடம் புயல் வரும் என்று சொன்னோம். இந்த கார்த்திகையில் நான்கு புயல் ஏற்பட்டது.
செயற்கையில் இயற்கை வளர முடியாது. இயற்கையில் செயற்கை சேர்ந்துவிடும். ஆற்றுநீரும், சாக்கடை நீரும் ஒன்று சேர்ந்து முகத்து வாரத்தை அடைகிறது. அதுபோல பாவமும் புண்ணியமும் சேர்கின்றது. உள்ளத்தில் உயிர் பற்றிக் கவலை கிடையாது. அது எப்போ வருமோ எப்போ போகுமோ தெரியாது. எப்படி வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்துக் கொண்டே இருக்கிறோமோ அதேபோல் உயிரை தட்டி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். உள்ளம் சுத்தமாக இருந்தால் கொரோனா போன்ற அழிவுகள் வராது.
கொரோனா என்பது மாரியம்மைதான், இதற்காகத் தான் அந்தகாலத்தில் வேப்பிலை கொண்டு மஞ்சள் நீர் தெளித்தோம். அந்த காலத்தில் தான் வாடினாலும் பரவாயில்லை தன் நண்பன் வாடக்கூடாது என்று நினைத்தான். ஆனால் இன்று நண்பனுக்கு நண்பன் துரோகம் செய்கிறான், கொலை செய்கிறான் என்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தி வருகிறது.
ஏமாற்றுவதற்கு என்ன என்ன வழியோ அதை மனிதன் இன்று கையாளுகிறான். இன்று தாய்ப்பால் ஊட்டக் கூட நேரம் கிடையாது. சூரியனைப்பார், சந்திரனைப்பார் என்று கூறி பசும்பாலில் தண்ணீர் கலந்து ஊட்டி ஏமாற்றுகிறோம். உள்ளத்தில் தெளிவும், பண்பும், அமைதியும், நிம்மதியும் எப்போதும் இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு அமைதி கிடைக்க வேண்டும் ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் வாழ வேண்டும், தொழில் வளர வேண்டும், கொரோனா நோயிலிருந்து எங்களைக் காப்பாற்றி அருள்புரிய வேண்டும் தாயே என்று வணங்க வேண்டும் இந்தப் பொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த்துக்கிறோம். வாசகர்களுக்கும், பக்தர்களுக்கும். பொதுமக்களுக்கும் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாம்பு கடித்து பலி: தென்காசி அருகே சோகம்!!
வியாழன் 21, ஜனவரி 2021 5:38:57 PM (IST)

இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப் போகும்- மத்திய அரசு
வியாழன் 21, ஜனவரி 2021 5:22:40 PM (IST)

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பும் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: விழா மேடை அகற்றம்
வியாழன் 21, ஜனவரி 2021 5:16:28 PM (IST)

மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
வியாழன் 21, ஜனவரி 2021 12:16:01 PM (IST)

சசிகலா உயிருக்கு ஆபத்து: உறவினர்கள் புகார்
வியாழன் 21, ஜனவரி 2021 11:11:26 AM (IST)

அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது : மருத்துவர்கள் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 11:08:29 AM (IST)

KANNANJan 14, 2021 - 03:46:40 PM | Posted IP 108.1*****