» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லாரி மீது லோடு ஆட்டோ மோதி சிறுமி உள்பட 2பேர் பலி : பொங்கல் கொண்டாட சொந்தஊர் வந்த போது சோகம்
புதன் 13, ஜனவரி 2021 4:33:12 PM (IST)
கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவையில் லேத் பட்டறை நடத்தி வருபவர் கோபால கிருஷ்ணன் (35). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திடீயூர் ஆகும். இவரது மனைவி விஜயா (34). இவர்களுக்கு யாசிகா (8) என்ற மகள், பிரனேஷ் (3) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் கோபால கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 10 பேர் பொங்கல் பண்டிகை கொண்டாட கோவையில் இருந்து நேற்றிரவு லோடு ஆட்டோவில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர். லோடு ஆட்டோவை ஆனந்தராஜ் மகன் பாஸ்கர் (37) என்பவர் ஓட்டி வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைச் செவல் என்ற இடத்தில் இன்று காலை சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் பாஸ்கரின் மனைவி சுமத்ரா (35) மற்றும் கோபாலகிருஷ்ணனின் மகள் யாசிகா (8) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் லேத் பட்டறை உரிமையாளர் கோபால கிருஷ்ணன் (35), பிரனேஷ் (3) லோடு ஆட்டோ டிரைவர் பாஸ்கர், அவரது 4 வயது மகன் ராஜ்குமார், சந்திரசேகர் என்பவரது மகன் பார்த்தீ பன்(20), ராதாகிருஷ்ணன் மகள் பிரிதா(20) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப்-இன்ஸ் பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த சிறுமி உள்ளிட்ட 2பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாம்பு கடித்து பலி: தென்காசி அருகே சோகம்!!
வியாழன் 21, ஜனவரி 2021 5:38:57 PM (IST)

இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப் போகும்- மத்திய அரசு
வியாழன் 21, ஜனவரி 2021 5:22:40 PM (IST)

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பும் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: விழா மேடை அகற்றம்
வியாழன் 21, ஜனவரி 2021 5:16:28 PM (IST)

மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
வியாழன் 21, ஜனவரி 2021 12:16:01 PM (IST)

சசிகலா உயிருக்கு ஆபத்து: உறவினர்கள் புகார்
வியாழன் 21, ஜனவரி 2021 11:11:26 AM (IST)

அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது : மருத்துவர்கள் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 11:08:29 AM (IST)