» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் வைக்க உகந்த நேரம்: ஜோதிடர்கள் கணிப்பு

புதன் 13, ஜனவரி 2021 12:45:28 PM (IST)

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (14-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ம் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். பொங்கல் பண்டிகை நாளை (14-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ம் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 

மயிலாடுதுறையை சேர்ந்த ஜோதிடர் பி.வி.ரமணி அய்யர் அளித்துள்ள நேரம் வருமாறு: நாளை (14-ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 11.35 மணி முதல் 1.30 மணி வரையும் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம். 15-ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் பானை வைத்து படைக்க உகந்த நேரம் ஆகும்.

ஹரித்துவார மங்கலம் ஜோதிடம் ஆர்.ராஜாராம அய்யர் கணித்துள்ள விவரம் வருமாறு: நாளை (14-ம் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அடுப்புகள் கட்டி காலை 11.05 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பகல் 1.30 மணிக்குள் பூஜை நிவேதனம் செய்து போஜனம் செய்ய உகந்தமான நேரம் ஆகும்.

15-ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணிக்குள் மாட்டுத்தொட்டி கட்டி பகல் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் மாடுகளை குளிப்பாட்டி மாலை 4.30 மணிக்கு மேல் மாட்டுப் பொங்கல் வைத்து மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மாட்டுப் பொங்கலிட்டு பூஜை செய்து மாடுகள் விட உத்தமமான நேரம் ஆகும். இவ்வாறு அவர்கள் கணித்துள்ளனர்.


மக்கள் கருத்து

தமிழன்Jan 13, 2021 - 04:03:28 PM | Posted IP 173.2*****

ஜோதிடம் என்ற மூடநம்பிக்கை வேற, அதுல தமிழ் கலாசாரத்தில் என்ன சம்பந்தம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory