» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சசிகலா 27-ம் தேதி விடுதலை: சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக நிர்வாகிகள் ஏற்பாடு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:33:09 PM (IST)
விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை செலுத்திவிட்டால் வருகிற 27-ம் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். இதையடுத்து வருகிற 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது.
விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகு நேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல்லாமல், ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில், தங்க அதிகவாய்ப்புள்ளது. அதற்காக, கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் ஓட்டல்களை பார்வையிட்டு, புக்கிங் செய்து விட்டதாக உளவு பிரிவு போலீசார் அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். மேலும், சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும், அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கவும், ஓசூரிலுள்ள பிரபல ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளனர்.
ஓசூரில் 27-ம் தேதி இரவு தங்கி விட்டு, 28-ம் தேதி காலை புறப்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை வந்து அடைகிறார். வரும் வழியில் அவருக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அ.ம.மு.க.வினர் சிலர் சசிகலா வருகிற 27-ம் தேதி இரவு விடுதலையாகி பெங்களூருவில் தங்கி விட்டு மறுநாள் 28-ம் தேதி காலைதான் அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக சென்னை செல்வார் என்றும் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாம்பு கடித்து பலி: தென்காசி அருகே சோகம்!!
வியாழன் 21, ஜனவரி 2021 5:38:57 PM (IST)

இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப் போகும்- மத்திய அரசு
வியாழன் 21, ஜனவரி 2021 5:22:40 PM (IST)

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பும் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: விழா மேடை அகற்றம்
வியாழன் 21, ஜனவரி 2021 5:16:28 PM (IST)

மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
வியாழன் 21, ஜனவரி 2021 12:16:01 PM (IST)

சசிகலா உயிருக்கு ஆபத்து: உறவினர்கள் புகார்
வியாழன் 21, ஜனவரி 2021 11:11:26 AM (IST)

அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது : மருத்துவர்கள் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 11:08:29 AM (IST)
