» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இருமுடி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்!!

வியாழன் 10, டிசம்பர் 2020 3:30:12 PM (IST)

மேல்மருவத்தூர் இருமுடி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சில முக்கிய சிறப்பு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

10.12.2020 முதல் 28.01.2021 வரை வண்டி எண் 02638 மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02662 செங்கோட்டை - சென்னை பொதிகை சிறப்பு ரயில் ஆகியவையும், 

11.12.2020 முதல் 29.01.2021 வரை வண்டி எண் 02635/02636 சென்னை - மதுரை - சென்னை வைகை சிறப்பு ரயில்கள் மற்றும் வண்டி எண் 02637 சென்னை - மதுரை பாண்டியன் சிறப்பு ரயில், வண்டி எண் 02661 சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் ஆகியவையும், 

11.12.2020 முதல் 22.01.2021 வரை வண்டி எண் 06064 நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில், 

17.12.2020 முதல் 28.01.2021 வரை வண்டி எண் 06063  சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில், 

16.12.2020 முதல் 27.01.2020 வரை வண்டி எண் 06011 கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் சிறப்பு ரயில்,  

12.12.2020 முதல் 25.01.2021 வரை வண்டி எண் 06012 டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஆகியவை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். 

மேலும் வண்டி எண் 05119 மான்டுயாடிஹ் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் 15, 22 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 05120 மான்டுயாடிஹ் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் 16, 23, 30 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 08495 ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சிறப்பு ரயில் டிசம்பர் 13, 20, 27 ஆகிய நாட்களிலும், வண்டி எண் 08496 புவனேஸ்வர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் 11, 18, 25 ஆகிய நாட்களிலும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory