» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தல்

புதன் 25, நவம்பர் 2020 10:26:03 AM (IST)

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ளதால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. புதன்கிழமை ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையடுத்து சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், திருநீர்மலை, வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுவதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை  என்று செம்பரம்பாக்கம் பிரிவு அலுவலர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory