» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏழு பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை: தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

செவ்வாய் 24, நவம்பர் 2020 4:45:29 PM (IST)

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும், கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் எதிர்க்கட்சியினர், பல்வேறு சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக 2018 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார்.  எனவே இதுகுறித்து ஆளுநரிடம் கூறியதற்கு, முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்றார்.


மக்கள் கருத்து

தமிழன்Nov 24, 2020 - 06:49:28 PM | Posted IP 162.1*****

தேர்தல் வரப்போகுது, அரசியல் லாபத்திற்காக நாடகம் , அரசியல்வாதிகள் எல்லாம் பிணந்தின்னி கழுகுகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory