» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவரின் மகனுக்கு பணி நியமன ஆணை - தமிழக முதல்வர் வழங்கினார்
செவ்வாய் 24, நவம்பர் 2020 3:11:34 PM (IST)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தூத்துக்குடியில் கடந்த 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் 27.5.2018 அன்று உத்திரவிட்டப்படி, வழங்கப்பட்டுவிட்டது.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் ஆணையிட்டிருந்தார்கள். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் 27.9.2018 அன்று மொத்தம் 18 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜ் என்பவரின் மகன் செல்வன் அஜய் ஜோன்ஸ், அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயதினை தற்போது எய்தியதால், அவருக்கு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளராக பணி புரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கி ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து பணிநியமன ஆணையினை பெற்றுக் கொண்ட செல்வன் அஜய் ஜோன்ஸ், தனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதியுதவியும், அரசு பணிக்கான பணிநியமன ஆணையும் வழங்கியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இதன்மூலம், முதலமைச்சர் ஆணையின்படி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுவிட்டது. இந்நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பாம்பு கடித்து பலி: தென்காசி அருகே சோகம்!!
வியாழன் 21, ஜனவரி 2021 5:38:57 PM (IST)

இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப் போகும்- மத்திய அரசு
வியாழன் 21, ஜனவரி 2021 5:22:40 PM (IST)

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பும் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: விழா மேடை அகற்றம்
வியாழன் 21, ஜனவரி 2021 5:16:28 PM (IST)

மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
வியாழன் 21, ஜனவரி 2021 12:16:01 PM (IST)

சசிகலா உயிருக்கு ஆபத்து: உறவினர்கள் புகார்
வியாழன் 21, ஜனவரி 2021 11:11:26 AM (IST)

அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது : மருத்துவர்கள் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 11:08:29 AM (IST)

M.sundaramNov 24, 2020 - 07:46:50 PM | Posted IP 108.1*****