» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தமிழக முதல்வருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு!

செவ்வாய் 24, நவம்பர் 2020 11:59:41 AM (IST)

’நிவர்’ புயல் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார்.

‘நிவர்’ புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், "நிவர் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் கேட்டறிந்தேன். புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory