» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எம்.ஏ., கீதாஜீவன் டோஸ்!

ஞாயிறு 25, அக்டோபர் 2020 11:42:55 AM (IST)தூத்துக்குடி விவிடி சாலையில் வீடுகளின் வாசல்களை மறைத்து ஸ்மார்ட் சிட்டி அழகுபடுத்தும் தூண்கள் வைக்கப்பட்டுள்ளதை எம்.எம்.ஏ., கீதாஜீவன் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.

தூத்துக்குடி விவிடி சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கான்க்ரீட் சாலை மற்றும் அழ‌குபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் கால்வாய் அமைத்து அழகுபடுத்தும் தூண்கள் வைக்கப்பட்டு வருகிறது. பிரதான சாலையாக இருந்த இந்த சாலை சிறிய சாலையாக மாறியுள்ளது. தற்போது சாலையின் ஓரத்தில் நடைபாதைக்காக பேவர் பிளாக் அமைத்து அழகுபடுத்தும் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வாசல்களை மறைத்து அழகுபடுத்தும் தூண்கள் வைக்கப்பட்டு வீடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளதாக தூத்துக்குடி எம்.எம்.ஏ., கீதாஜீவனிடம் முறையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.எம்.ஏ., கீதாஜீவன் மாந்கராட்சி அதிகாரிகளை உடனடியாக வருமாறு அழைத்தார். பின்னர், இப்படி வீட்டின் முன்பு கான்க்ரீட் தூண்களை வைத்தால் எப்படி அவர்கள் வீடுகளுக்கு செல்லமுடியும் என்று டோஸ் விட்டார். 

மேலும், வணிக நிறுவனங்களின் முன்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த தூண்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த அழகுபடுத்தும் தூண்களை அப்புறப்படுத்தினர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அனைவரும் எம்.எம்.ஏ.,வின் நடவடிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மக்கள் கருத்து

சரவணக்குமார்Oct 26, 2020 - 07:37:11 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாநகராட்சியில் இந்தப் பகுதியில் என் எந்தவிதமான பணி செய்ய இருக்கிறோம் என்ற வரைபடமே இல்லை மக்கள் மனதில் அச்சத்துடனே இருக்கின்றனர்

மணியன்Oct 26, 2020 - 01:56:14 PM | Posted IP 162.1*****

நம்ம ஊரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆக்கிரமிப்பு அகற்றி விரிவு படுத்தாமல் எதுவும் செய்ய இயலாது. மாநகராட்சி விதிப்படி சாலைகள் இல்லை

தூத்துக்குடி ஏரியா காரன்Oct 25, 2020 - 12:48:15 PM | Posted IP 162.1*****

மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி சொல்லி ஊரெல்லாம் தோண்டி தோண்டி ரோட்டை நாசமாகி சாக்கடை ஆகிடுவாங்க.. எங்கேயோ பிடித்து வந்த சாக்கடையை ஊரெல்லாம் தோண்டி அங்காங்கே கொட்டிவிடுவார்கள் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory