» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜனவரி 1 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு உத்தரவு

ஞாயிறு 25, அக்டோபர் 2020 10:44:41 AM (IST)

ஜனவரி 1 முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள், அதாவது சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த மே 15-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு அலுவலகத்திலும் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று ஆணையிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து ஒவ்வொரு அலுவலகமும் 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்டு 31-ம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்களும் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு மாற்றியுள்ளது. அதன்படி, ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, 100 சதவீத பணியாளர்களுடன் 5 வேலை நாட்கள் தற்போதுள்ள நேர அளவின்படி அரசு அலுவலகங்கள் இயங்கும். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory