» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளை அருகே போலீஸ் இன்பார்மர் வெட்டிக் கொலை : மணல் கடத்தல் கும்பல் வெறிச்செயல்

சனி 24, அக்டோபர் 2020 5:14:51 PM (IST)

பாளை அருகே மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த இன்பார்மர் இன்று அதிகாலை கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். 

பாளை அருகே நடுவக்குறிச்சியை அடுத்த உடையார் குளத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் பரமசிவன் (45), கூலி வேலை செய்து வந்த இவர் போலீஸ் இன்பார்மராகவும் செயல்பட்டு வந்தார். நேற்றிரவு இவர் தனது வீட்டுக்கு வெளியே பின்புறம் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஒரு கும்பல் அவரது தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது. அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ள மனைவி மற்றும் மகன்கள் எழுந்து பார்த்த போது, பரமசிவன் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடத்தது தெரியவந்தது.

தகவலறிந்து தாழையூத்து டிஎஸ்பி அர்ச்சனா, பாளை தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்யப்பட்ட பரமசிவன் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டு வந்தார். மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் சிலரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்படும் போது போலீசார் இவரிடம் புகார் வாங்கி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், பரமசிவனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் இந்தக் கொலை நடத்ததா? அல்லது மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததால் பாதிக்கப்பட்ட நபர்கள் இதைச் செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட பரமசிவனுக்கு பார்வதி என்ற மனைவியும், ஒருமகள் மற்றும் 2 மகன்கள் உள்ளன. இந்த சம்பவம் பாளை வட் டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory