» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அரசு அமையப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை - முக ஸ்டாலின் பேச்சு

வியாழன் 22, அக்டோபர் 2020 5:22:37 PM (IST)

"கருணாநிதி அரசு நீடித்திருந்தால் வேறு பாதை பிறந்திருக்கும். அத்தகைய அரசு அமையப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்காக இலவச வேலைவாய்ப்பு முகாம் மூலமாக மூவாயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். 50 முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், வேலைவாய்ப்பு பஞ்சம் உள்ளதால் தான், வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் பணி வழங்கப்படுகிறது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில், மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன. 

அனைவரும் படிக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் ஆண், பெண் பேதம் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம். தமிழகத்தில் அதிக கல்லூரிகளை திறந்து வைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தமிழக அரசில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை உருவாக்கிவர் கருணாநிதி. திமுக ஆட்சியில் தான் 620 ஐ.டி. நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. கருணாநிதி அரசு நீடித்திருந்தால் வேறு பாதை பிறந்திருக்கும். அத்தகைய கருணாநிதி அரசு அமையப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

rajkumarOct 23, 2020 - 10:56:00 AM | Posted IP 162.1*****

2 G // CURRENT //

போதும் திராவிட நாடக கம்பெனிOct 22, 2020 - 11:08:56 PM | Posted IP 162.1*****

உளறுவாயன் எப்போதும் உளறி கொண்டே இருப்பான்.. திமுக அரசு தோற்கப்போகும் நாள் தூரத்தில் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory