» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளை சிலை: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்

வியாழன் 22, அக்டோபர் 2020 12:37:48 PM (IST)புதுக்கோட்டை விராலிமலையில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில்  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

விராலிமலையில் ஐடிசி (ITC) நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றினார். விழாவில் பேசிய அவர், தொழில்மயமான மாநிலங்களில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியில் ஐடிசி நிறுவனம் தொழிற்சாலை தொடங்கியதில் மகிழ்ச்சியளிக்கிறது; பாராட்டுகிறேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory