» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
புதன் 21, அக்டோபர் 2020 4:08:54 PM (IST)
காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இரவு 10:00 மணி வரை இயங்கலாம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது.மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தினை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 22.10.2020 முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
அம்மாவின் அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்த சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகை காலங்களில், நோய்த் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும்; முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

டயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
திங்கள் 18, ஜனவரி 2021 5:47:10 PM (IST)

தி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்
திங்கள் 18, ஜனவரி 2021 5:13:13 PM (IST)

திருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்!!
திங்கள் 18, ஜனவரி 2021 4:46:22 PM (IST)

காலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:27:14 PM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 18, ஜனவரி 2021 10:23:02 AM (IST)
