» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் மகன் காலமானார்

சனி 17, அக்டோபர் 2020 12:06:31 PM (IST)

சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் மகன் அன்பழகன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். 

திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் மகன் அன்பழகனுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தனர். சுப்ரமணியனின் மகன் அன்பழகன் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 34.

இது குறித்து மா. சுப்ரமணியனின் உதவியாளர் சிந்தன் கூறுகையில், அன்பழகனுக்கு கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பு எடுத்த பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மாற்றுத் திறனாளியான அன்பழகனை, அவரது தாய் காஞ்சனா, மிகவும் அன்போடு கவனித்து வந்துள்ளார். அவர் எப்போதுமே வீட்டை விட்டு வெளியே வர மாட்டார், தனது மகனை கவனித்துக் கொள்வதிலேயே முழுக் கவனமும் செலுத்தினார். 

அன்பழகன் தனது விரல் அசைவுகள் மூலமாகத்தான் தனது தேவைகளை வெளிப்படுத்துவார்.  அன்பழகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும். ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ரஜினி படத்தைப் பார்த்தாலே போதும், அவரது பாடல்களை முனுமுனுப்பது, வசனங்களை பேச முயற்சிப்பது போன்றவற்றை செய்வார். அவர் மிகவும் புத்திசாலி. ஒருவர் வரும் சத்தத்தைக் கொண்டே யார் வருகிறார்கள் என்பதை சொல்லிவிடுவார். அவரது அப்பா வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும் போதே அவரது காலடி சத்தத்தைக் கேட்டுவிட்டு அப்பா அப்பா என்று குரல் கொடுப்பார் என்று மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார் சிந்தன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory