» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டு உரிமையாளர் மகனை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்ற தாய், மகன் கைது

சனி 26, செப்டம்பர் 2020 5:18:27 PM (IST)

சென்னை, அரும்பாக்கத்தில் வீட்டு உரிமையாளரின் மகனை 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக தாய்-மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கம், திருவேங்கடகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் ஸ்ரீராம் (19). சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் ராஜா என்பவர் சில ஆண்டுகளாக குடும்பத்துடன் லீசுக்கு இருந்து வருகிறார். நேற்று மதியம் குப்புசாமி வீட்டின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீடு காலியானது. அந்த வீட்டுக்கு ராஜாவின் மகன் சங்கர் (28) பூட்டு போட்டு வைத்திருந்தார். அந்த பூட்டை ஸ்ரீராம் உடைக்க முயன்றார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சண்டையின் போது ஸ்ரீராமை 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் உயிரிழந்தார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் வாடகை வீட்டில் லீசுக்கு இருக்கும் ராஜா, வீட்டின் உரிமையாளர் குப்புசாமிக்கு லீசுக்கான ரூ.5 லட்சம் பணத்துடன், மேலும் ரூ.2 லட்சம் கடன் வாங்கிகொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை அந்த கடன் தொகைக்கு வட்டி செலுத்தவில்லை. அசல் தொகையும் தரவில்லை என்பதால் தனக்கு பணம் கொடுக்கும் வரை அந்த வீட்டுக்கு யாரும் வாடகைக்கு வரக்கூடாது என ராஜா தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து ராஜாவின் மகன் சங்கர், மாடியில் உள்ள வீட்டுக்கு பூட்டு போட்டுள்ளார். அந்த பூட்டை உடைக்கும் போது ஏற்பட்ட தகராறில் தான் மாடியில் இருந்து தள்ளி விட்டதில் ஸ்ரீராம் கீழே விழுந்து இறந்ததுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் (28) மற்றும் அவரது தாய் பானு (46) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory