» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய்-மகள் படுகொலை : நாங்குநேரி அருகே பதட்டம் ‍ ‍- போலீஸ் குவிப்பு

சனி 26, செப்டம்பர் 2020 5:14:52 PM (IST)நாங்குநேரி அருகே  வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று  நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய் - மகளை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாசலம் என்பவரது மகன்  நம்பிராஜன் அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகள் வான்மதியை இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருந்த போதும் காதல் திருமணத்தால்  நம்பிராஜன் குடும்பத்தினருக்கும் தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது். காதல் திருமணம் செய்துகொண்ட நம்பிராஜன் வான்மதி தம்பதியினர் நெல்லை டவுணில்  வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி நம்பிராஜன்  . கொலை செய்ப்பட்டார் .  

இந்த கொலை வழக்கில் வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி  மற்றும் உறவினர்கள் செல்லத்துரை , முருகன் ஆகியோரை கைது செய்ப்பட்டனர்.  . இதனைத் தொடர்ந்து நம்பிராஜன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கடந்த 14-03-20 அன்று  நம்பிராஜன் கொலை வழக்கில் தொடர்புடைய செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் நாங்குநேரியில்  ஒரு கடையில் வைத்து கொலை செய்யப்பட்டனர் .

இந்த கொலை வழக்கு தொடர்பாக நம்பிராஜனின் அண்ணன் ராமையா , தாய் சண்முகத்தாய்  மற்றும் சங்கர், இசக்கி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் மறுகால்குறிச்சியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்த ராமையா சண்முகத்தாய் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில் ராமையா, உறவினர்கள் சுரேஷ், இசக்கி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி சென்றுவிட்டனர். 

வீட்டில் தாய் சண்முகத்தாய், அவரது கணவர் அருணாச்சலம் மட்டும் இருந்துள்ளனர் . அருகில் சண்முகத்தாயின் மகன் சாந்தி வசித்து வருகிறார் . இந்நிலையில் பட்டபகலில்  முகமூடி அணிந்த நிலையில் 12 பேர் கொண்ட மர்ம கும்பல் அதிரடியாக சாந்தி வீட்டிற்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி சாந்தியின் கழுத்தை அறுத்து துண்டித்து கொலை செய்து அவரது தலையை கையில் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த சண்முகத்தாய் வீட்டிற்குள் வெடிகுண்டுகளை வீசி உள்ளனர் . இதில் அருணாசலம் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார் .  

வீட்டிற்குள் இருந்த சண்முகத்தாயையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு சாந்தியின் தலையை நடுரோட்டில் வைத்துவிட்டு 12 பேர் கொண்ட கும்பலும் தப்பியோடிவிட்டது. இதில் சாந்தியின் 3 வயது குழந்தை படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர் . பின்னர் இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

மேலும் இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர் . நாங்குநேரி டோல்கேட் சிசிடிவி கேமரா கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சம்பவ இடத்தில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .  காதல் திருமணத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தொடர் பழிக்கு பழியாக நடக்கும் கொலைச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory