» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

சனி 26, செப்டம்பர் 2020 1:38:17 PM (IST)



மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டது. மதியம் 12.30 மணியளவில் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory