» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை - நன்னடத்தை சலுகையில்லை!!

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 10:31:49 AM (IST)

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. "அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார். ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டுதள்ளிப்போகும் என தெரியவந்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory