» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வு தற்கொலைகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது: முக ஸ்டாலின்

திங்கள் 14, செப்டம்பர் 2020 12:12:18 PM (IST)

நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் முகக்கவசம் அணிந்து பேரவையில் பங்கேற்றனர். பேவைத் தொடங்கியதும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ.அன்பழகன், எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் கரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்திவைத்தார். தொடர்ந்து கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், நீட் தேர்வினால் தற்கொலை செய்த மாணவர்களுக்காகவும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். ஆனால் எனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை. இது வருத்தத்திற்குரியது. கண்டனத்திற்குரியது. 

புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்தும் பேச அனுமதி கோரியுள்ளோம். மாணவர்கள் உயிரிழப்பு குறித்தும் விவாதிக்க வேண்டும். எனவே, பேரைக் கூட்டம் 2 நாள் போதாது என்று எதிர்க்கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முதல்வரோ, அமைச்சரோ ஒருமுறைகூட பிரதமரை சந்தித்து இதுவரை வலியுறுத்தியதில்லை என்றார். 


மக்கள் கருத்து

மக்கள்Sep 14, 2020 - 03:14:08 PM | Posted IP 162.1*****

This idiotic talks only spoiling the students. Instead of promoting like this they can motivate and supportstudents positively on doing Neet, well. So that we can score better like telungana, etc in NEET and JEE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory