» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்: மாணவி புகார்

திங்கள் 14, செப்டம்பர் 2020 12:04:35 PM (IST)

நீட் தேர்வின்போது, உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர் என  மாணவி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா (18). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த உடன் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எனது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததால் என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர். எனவே நான் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.

ஆனால் இவருடைய குற்றச்சாட்டை அந்த தேர்வு மையத்தின் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். அவரை தேர்வு எழுதுவதற்கு முழுமையாக அனுமதித்தோம் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் தங்களிடம் எந்த புகாரும் வரவில்லை என்று கீழ்ப்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். நீட் தேர்வு தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்க விரும்பினால் டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு மட்டுமே அளிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory