» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் பலி - உருக்கமான தகவல்கள்!!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 9:36:15 AM (IST)கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இந்நிலையில் 6ஆம் தேதி பெய்த கனமழையில் பெட்டிமடி தேயிலை தோட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளில் தூங்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மண்ணில் புதைந்தனர். 

இதையறிந்த கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தோர் ராஜமலை பெட்டிமடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அறிந்து சோகத்தில் மூழ்கினர். பின்னர் வட்டாட்சியர் பாஸ்கரனை தொடர்பு கொண்டனர். இதையடுத்து வட்டாட்சியர் பாஸ்கர் கயத்தாறு பாரதி நகர் பகுதிக்குச் சென்று அப்பகுதி பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி்னார். மேலும், தங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அமைச்சர் கடம்பூர்செ.ராஜு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, கேரள அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இந்நிலையில், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்ததாக வட்டாட்சியர் பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. அவர்களின் பெயர் விவரம்: நடராஜன் மகன் முருகன்(48), அவரது மனைவி ராமலட்சுமி(39), பேச்சிமுத்து மகன் மயில்சாமி(45), அவரது மனைவி ராஜேஸ்வரி(43), ஆறுமுகம் மகன் பன்னீர்செல்வம்(46), மனைவி தவசியம்மாள்(45), மகள் மௌனிகா(18), சண்முகநாதன் மகன் தினேஷ்(25), பன்னீர்செல்வம் மகள் சிவரஞ்சினி(24), ராமசந்திரன் மகன் ராஜா(35), சுப்பையா மகன் குட்டிராஜ்(47), அவரது மனைவி விஜிலா(45), அச்சுதன் மனைவி பவுன்தாய்(52), மகன் மணிகண்டன்(20), பலவேசம் மகன் சண்முகையா(58), பிரபு மனைவி பழனியம்மாள்(50), மகன் தீபக்(18).தற்போது வரை 17 பேர் உயிரிழந்துள்ள தகவல் கிடைத்துள்ளது. மேலும், புதைந்த சடலங்கள் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் கயத்தாறு பாரதி நகர் பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory