» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்க வேண்டும்; வைகோ வலியுறுத்தல்

சனி 8, ஆகஸ்ட் 2020 12:11:13 PM (IST)

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தாலும், பேரிடர் காலங்களில் களப்பணி செய்யவும் கடந்த 2019 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு 2019 மார்ச் மாதம் தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது.

அதன் விளைவாக, 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதற்கான உடல் தகுதித் தேர்வு 2019 டிசம்பரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 14 ஆயிரத்து 949 நபர்கள், 2020 மார்ச் 15 இல் எழுத்துத் தேர்வு எழுதினார்கள். அதன் முடிவுகள் 2020 மே மாதம் தரவரிசைப் பட்டியலுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், முடிவுகள் வெளியிட்டு மூன்று மாதங்கள் கடந்தும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்படவில்லை.

இல்லாமையாலும், வறுமையாலும் வாடும் அவர்களுடைய நிலைமையை எண்ணி, தகுதி அடிப்படையில் மின்சார வாரியம் விரைவில் பணி ஆணை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory