» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் : நெல்லையில் முதல்வர் பேச்சு!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 1:38:08 PM (IST)கரோனா காலத்திலும் இந்தியாவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக  தமிழகம் விளங்குகிறது என நெல்லையில் நடந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பில் முதல்வர் எடப்பாடி கூறினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (7.8.2020) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதல்வர், கரோனா காலத்திலும் இந்தியாவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாகவும், அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது என கூறினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏக்கள், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கோபால், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory