» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நவம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை: அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 12:02:01 PM (IST)

தமிழகத்தில் வரும் நவம்பா் மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.

கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தோ்வுகளில் மாணவா்கள் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு தோ்ச்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தோ்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. தற்போது சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் பள்ளிகளைத் திறப்பது குறித்து இதுவரை அரசின் சாா்பில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும், தனியாா் பள்ளிகள் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதேபோன்று, அரசுப் பள்ளிகளும் தற்போது தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியுள்ளன. இந்த நிலையில், நவம்பா் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் நேற்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கு வாய்ப்பில்லை. அதுகுறித்த எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததும், பொதுமக்களின் கருத்துகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்படும். சூழ்நிலை சரியானவுடன் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா் என அந்தப் பதிவில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory