» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் எடப்பாடி நெல்லை வருகை : ரூ. 208.30 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 11:37:08 AM (IST)



திருநெல்வேலி, தென்காசியில் ரூ. 208.30 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் கூட்டம் ஆகியவற்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். மேலும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.32.30 கோடி மதிப்பில் முடிவுற்ற 20 திட்டப் பணிகளை  தொடங்கி வைத்தார். 

மேலும் ரூ.208.30 கோடி மதிப்பில்  8 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,800 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர், முதல்வர் தலைமையில் திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களுக்கான கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது.

கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ராஜலெட்சுமி, எம்,எல்.ஏக்கள், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கோபால்,தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory