» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது - மக்கள் அச்சமடைய வேண்டாம்: சுங்கத்துறை

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 5:17:01 PM (IST)

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெபனான் நாட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டதால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விளக்கத்தை அளித்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், " 6 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மின்னணு முறையில் ஏலம் விடப்படும். மணலி  சுங்கத்துறை கிடங்கை சுற்றி வீடுகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory