» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனநலம் பாதித்த பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 10 ஆண்டு சிறை : நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 31, ஜூலை 2020 8:07:05 PM (IST)

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேனி மாவட்டம் தெப்பம்பட்டி, புதுக்காலனியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் செந்தில்(37) என்பவர் மானபங்கப்படுத்தியதாக அவரது தாயார் கடந்த 2013, நவ.20-ம் தேதி ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் மீது காவலர்கள் வழக்கு பதிந்து செந்திலை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கீதா, மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கப்படுத்தியதாக செந்திலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழக்குமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory