» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் பேருந்து, ரயில் இயங்குமா? : பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்

செவ்வாய் 28, ஜூலை 2020 12:02:18 PM (IST)தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் முதல் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்குமா என்கிற என பொதுமக்கள் எதிர்பார்தாலும் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என்றே தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 25 முதல் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் சில நாட்கள் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்பின் கொரோனா தொற்று அதிகரித்ததும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பொது ஊரடங்கு வரும் 31ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்த்துவதா? என அரசு ஆலோசித்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்படா விட்டாலும் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து துவக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது ஆனால் பொது போக்குவரத்து அனுமதிக்கப் படாமலேயே அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

பொது போக்குவரத்தை அனுமதித்தால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே ஆக., 1 முதல் பேருந்து, ரயில் போக்குவரத்து இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகளை இயக்கலாம் என சில அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். இது குறித்து அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது நாளை தெரியும்.


மக்கள் கருத்து

KaruppJul 30, 2020 - 08:22:21 PM | Posted IP 157.5*****

ஆகஸ்ட் 1 பேருந்து இயங்குமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory