» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை

சனி 11, ஜூலை 2020 12:47:17 PM (IST)சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்தது. இதை ஏற்று டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி மாலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக டெல்லி சி.பி.ஐ. கூடுதல் எஸ்பி., விஜயகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர். அங்கு வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. ஜெயராஜ், பெனிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  சாத்தான்குளத்தில் 2 குழுக்களாக பிரிந்து விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory