» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயன்படுத்திய மாஸ்க்குகளை குப்பைகளுடன் வீசகூடாது : மாநகராட்சி அறிவுறுத்தல்

சனி 11, ஜூலை 2020 10:34:53 AM (IST)

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளை குப்பைகளோடு வீசாமல் தனியாக சேமித்து வைத்து புதன்கிழமைகளில் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு திருநெல்வேலி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பொதுமக்கள் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுதல் போன்றவற்றை தவறாது கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் பயன்படுத்திய மாஸ்க்குகளை சாலைகள், தெருக்கள், வணிக வளாகப் பகுதிகளில் வீசுவது அதிகரித்துள்ளது. 

இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, பொதுமக்கள் பயன்படுத்தி மாஸ்க்குகளை பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியாமல், புதன்கிழமைகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் மக்காத குப்பையை வழங்கும்போது முகக் கவசங்களையும் தனி உறையில் வழங்க வேண்டும். மாநகர பகுதிகளில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory