» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செப்டம்பரில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சனி 11, ஜூலை 2020 10:30:45 AM (IST)

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் தேவை என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், கரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.

செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் செப்டம்பரில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory