» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மொபட் வாகனம் பறிமுதல்: திருநங்கை தற்கொலை

சனி 11, ஜூலை 2020 9:04:37 AM (IST)

சென்னையில் மொபட் வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதால், திருநங்கை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சபீனா (19). இவர் நேற்று முன்தினம் இரவு வள்ளுவர்க் கோட்டம் அருகே தனது மொபட் வாகனத்துடன் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு சபீனா தனது மொபட் வாகனத்தை விட்டு சென்றார். இதையடுத்து ரோந்து போலீசார் அந்த மொபட்டை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுவிட்டனர். 

பின்னர் சிறிது நேரம் கழித்து சபீனா காவல் நிலையம் சென்று தனது மொபட்டை கொடுக்கும்படி கேட்டு உள்ளார். உரிய ஆவணங்களை காட்டி, எடுத்து செல்லும்படி போலீசார் அவரிடம் கூறிவிட்டனர். இதனால் மனமுடைந்த சபீனா கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory